உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி

ஆனைமலை:ஆனைமலையில், பள்ளி சுகாதாரத் திட்டம் சார்பில் திறனாய்வு பயிற்சி நடந்தது.பள்ளி சுகாதாரத் திட்டம் சார்பில், மாணவர்கள் மற்றும் வளர்இளம் பெண்களுக்கு தலை முதல் கால் வரை ஏற்படக்கூடிய உடல் நலம் மற்றும் மனநல மாற்றங்களை கண்டறியும் திறனாய்வு பயிற்சி, ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி சுகாதாரக்குழு டாக்டர்கள் பிரசன்னா மற்றும் நிவேதாஸ்ரீ ஆகியோர் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.மருந்தாளுநர்கள் வசந்த், திருமலை, வெங்கடேஷ், உதவி கண் மருத்துவ அலுவலர் அசோகன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை, சுகாதார ஆய்வாளர்கள் கிஷோர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்