உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒவ்வொருவரிடமும் சிறந்த மேலாண்மை திறன் உள்ளது

ஒவ்வொருவரிடமும் சிறந்த மேலாண்மை திறன் உள்ளது

கோவை;பி.எஸ்.ஜி., மேலாண்மைக் கல்லுாரி நிறுவன தின விழா, பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.விழாவில், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''ஆசிரியர்கள்தான் மாணவர்களை மட்டுமல்ல, நிர்வாகத்தையும் நல்ல முறையில் நடத்த உதவுகின்றனர். மேலாண்மை என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் முக்கியமான ஒன்று. அதை கற்றுத் தேர்ந்து விட்டால், சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும். மேலாண் திறன் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. அதை பயன்படுத்துவது அவரவர் திறமை,'' என்றார்.முன்னதாக, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி இயக்குனர் ஸ்ரீவித்யா வரவேற்றார். பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை