உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்களுக்கு தூறல் மழை எதிர்பார்ப்பு

மூன்று நாட்களுக்கு தூறல் மழை எதிர்பார்ப்பு

கோவை;கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தூறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஜூன் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு தூறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22--24 செல்சியஸ் ஆகவும், காலைநேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு 16--20 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எதிர்பார்க்கப்படும் மழையைப் பயன்படுத்தி மானாவரியில் தக்காளி நடவு செய்ய இது உகந்த பருவம் ஆதலால் தக்க ஆயத்த பணிகளை மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை