உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பங்களில் பஸ் ஸ்டாப்  இடமாற்றம் செய்ய எதிர்பார்ப்பு  

திருப்பங்களில் பஸ் ஸ்டாப்  இடமாற்றம் செய்ய எதிர்பார்ப்பு  

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு பகுதிகளில் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்புகளை இடமாற்றம் செய்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.பொள்ளாச்சிக்கு தொழில் நிமித்தமாக பலரும், நகருக்க வந்து செல்வதால், அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ளது. நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால், முக்கிய சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இதுஒருபுறமிருக்க, நகரின், பிரதான வழித்தடத்தில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு பகுதிகளில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளதாலும் நெரிசல் அதிகரிக்கிறது. இப்பகுதிகளில், பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றி, இறக்கி விடும் போது, பின்னால் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது.ரோட்டை மறித்து நிறுத்தப்படும் பஸ்களால், அவசரமாக செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'காலை மற்றும் மாலை நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால், பிற வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, பாதசாரிகளும் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு ஒட்டிய பஸ் ஸ்டாப்புகளை சற்று துாரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி