உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பணைகள் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தடுப்பணைகள் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்:ஏழு எருமை பள்ளத்தில் உள்ள தடுப்பணைகளில், தண்ணீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் தாலுகாவில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக மழை பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்லிலும் தண்ணீர் குறைந்தது.பெரியநாயக்கன்பாளையத்தில் துவங்கும், ஏழு எருமை பள்ளம், வீரபாண்டி பிரிவு, பிளிச்சி, சிக்காரம்பாளையம், பெள்ளாதி, ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சிறுமுகை பேரூராட்சி வழியாக, பவானி ஆற்றுக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தால், இப்பள்ளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். பள்ளத்தில் வரும் தண்ணீரை தடுத்து தேக்கி வைக்க, பிளிச்சி ஊராட்சி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் கருப்பராயன் நகர், காளட்டியூர், பெள்ளாதி ஊராட்சியில் பெள்ளாதி, மொள்ளேபாளையம், தேரம்பாளையம், ஜடையம்பாளையம் ஊராட்சியில் சென்னம்பாளையம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் வெள்ளிக்குப்பம்பாளையம், பகத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஏழு எருமை பள்ளத்தில் வந்த வெள்ளப்பெருக்கால், இப்பள்ளத்தில் கட்டி உள்ள தடுப்பணைகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து பெள்ளாதி பகுதி விவசாயிகள் கூறியதாவது: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால், தடுப்பணைகள் அனைத்தும் நிறைந்து வழிகின்றன. இதனால் நான்கு மாதங்களுக்கு விவசாயக் கிணறுகளில் நீரூற்று கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை