உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுரைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சுரைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் குளத்துப்பாளையம் பகுதியில், விவசாயிகள் சிலர் சுரைக்காய் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.விவசாயி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிலத்தில், 80 சென்ட்டில் பந்தல் அமைத்து அதில் சுரைக்காய் பயிரிட்டுள்ளோம். சுரைக்காய் பயிரிட்டு 50 நாட்கள் ஆகிறது. தற்போது காய்கள் பறிக்கத்துவங்கியுள்ளோம். இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காய்கள் பறிப்போம்.இதற்கு சொட்டு நீர் பாசனம் வாயிலாக தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். பயிரிட்டதில் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஒரு சுரைக்காய், 700 முதல் 800 கிராம் எடை அளவு இருபின் காய்கள் பறித்து விடுவோம்.தற்போது மார்க்கெட்டில் விலை சற்று குறைவாக உள்ளதால், லாபம் பெரிதாக இருக்காது. குறைந்தது ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விலை போனால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் வரத்துவங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை