உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலம் வாங்குவதாக ரூ.2.45 கோடி மோசடி: தனது மூத்த மகள் மீது தந்தை பகீர் புகார்

நிலம் வாங்குவதாக ரூ.2.45 கோடி மோசடி: தனது மூத்த மகள் மீது தந்தை பகீர் புகார்

கோவை:நிலம் வாங்கினால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி, தனது மகள் ரூ.2.45 கோடி மோசடி செய்து விட்டதாக, பீளமேடு போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.கோவை நேரு நகரை சேர்ந்தவர் தங்கராஜூ,68. இவருக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். மூத்த மகள் அபிநயாவின் தோழி ஜெயசுதா. ஜெயசுதாவின் நண்பர் கேசவ மூர்த்தி. இவர்கள் மூவரும் நிலம் வாங்குவதில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என தங்கராஜூவிடம் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த ஜன., 20ம் தேதி ரூ.90 லட்சம், 31ம் தேதி ரூ.90 லட்சம் என, ரூ.1.80 கோடியை அபிநயாவின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.பிப்., மாதம் தங்கராஜூவிடம் சொத்தை பிரித்து தருமாறு, அபிநயா கேட்டுள்ளார். பிப்., 24ம் தேதி அவரது, 17 ஏக்கர் நிலத்தை அபிநயாவின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். அதன் பின் அபிநயா சென்னை சென்றுவிட, அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஜூன் 3ம் தேதி பாஸ்போர்ட், ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் அபிநயா தனியே சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் ஜெயசுதா, கேசவ மூர்த்தி ஆகியோரிடம் சென்னை பல்லாவரத்தில், தங்கராஜூ அளித்த பணத்தில், நிலம் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தனது ரூ.2.45 கோடி பணத்தை ஏமாற்றியதாக, அபிநயா மீது தங்கராஜூ பீளமேடு போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடந்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை