உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பங்கு சந்தையில் முதலீடு என கூறி ரூ.1.63 கோடி மோசடி

பங்கு சந்தையில் முதலீடு என கூறி ரூ.1.63 கோடி மோசடி

தொண்டாமுத்துார்:கோவை, தொண்டாமுத்துார், லட்சுமி நகரை சேர்ந்தவர் விவேக், 43, ஐ.டி., ஊழியர். பங்குச் சந்தையில் ஆர்வம் கொண்டவர். அக்சதா ராம் என்பவரிடம் இருந்து விவேக் எண்ணிற்கு 'வாட்ஸாப்' அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தங்கள் குழுவில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறினார். அதற்காக, ஒரு செயலியை கூறி, அதை பதிவிறக்கம் செய்ய கூறினார். கடந்த மே, 24ல் 40,000 ரூபாயை விவேக் முதலீடு செய்தார். அதில் கிடைத்த லாபம், 1,000 ரூபாயை தன் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டார். பணத்தை எடுக்க முடிந்ததால், நம்பிக்கை பெற்ற விவேக், மே, 24 முதல் ஜூலை, 27 வரை, 29 தவணைகளாக, 1.63 கோடி ரூபாயை, அந்த மோசடி நபர்கள் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.மோசடி நபர்கள் போலியாக உருவாக்கிய செயலியில், அவர் டிரேடிங் செய்து லாபம் சம்பாதித்தது போல காட்டியது. இப்படியாக, அவரின் கணக்கில், 15.36 கோடி ரூபாய் இருப்பதாக காட்டியது. மகிழ்ச்சி அடைந்த விவேக் பணத்தை எடுக்க முயற்சித்தார், முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவேக், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை