உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் நிறுவனத்தில் ரூ.41.17 லட்சம் மோசடி

தனியார் நிறுவனத்தில் ரூ.41.17 லட்சம் மோசடி

கோவை:உக்கடம் அடுத்த செட்டிவீதியிலுள்ள தனியார் நிறுவனத்தில், மூத்த கோட்ட மேலாளராக பணிபுரிபவர் கணேசன்,41. அதே நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கிளை மேலாளராக பணிபுரிந்துள்ளார்.இந்நிறுவனத்தில் தணிக்கை மேற்கொண்டபோது, ஸ்ரீதர் நிறுவனத்தின் நிதியான ரூ.41 லட்சத்து, 17 ஆயிரத்தை,வாகன வாடகைக்கு செலவு செய்ததாக, மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, விளக்கம் கேட்டதற்கு, ஸ்ரீதர் பணியை விட்டு நின்றுவிட்டார். புகாரின் பேரில், பெரியகடை வீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை