மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
7 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
7 hour(s) ago
தேசிய நூலக வார விழா
7 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
7 hour(s) ago
கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, தபால் நிலையம் சந்திப்பில் அமைந்துள்ளது, டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. இங்கு, கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது.மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:மருத்துவமனையில் கண் தொடர்பான அனைத்துவித பார்வை பிரச்னைக்கும், நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த, சிகிச்சை அளிக்கிறோம். இங்குள்ள கண்புரை அறுவை சிகிச்சை பிரிவில், 25க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த கார்னியா மற்றும் லேசிக் அறுவை சிகிச்சை நிபுணரின் மேற்பார்வையில், உயர்ந்த தரத்திலான சிகிச்சை அளித்து வருகிறோம். சுதந்திர தினத்தையொட்டி, கண் பாதிப்புகளை கண்டறியும் இலவச பரிசோதனை முகாம், 18.8.24ம் தேதி(இன்று) துவங்குகிறது.முகாமில், மருத்துவர் ஆலோசனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, உலர் கண் பரிசோதனை, குளூக்கோமா, விழித்திரை, ஆப்டோமெட்ரிஸ்ட் மதிப்பீடு, கணினி மயமாக்கப்பட்ட பார்வை பரிசோதனை ஆகியவை உள்ளடக்கிய ரூ.1,250 மதிப்பிலான தொகுப்பு இலவசமாகவும், 20 முதல் 40 வயதுடையவர்களுக்கு ரூ.3,000 மதிப்பிலான லேசிக் ஸ்கிரீனிங் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.லேசிக் சிகிச்சைக்கு, கட்டணத்தில் 25 சதவீதமும், கண்புரை சிகிச்சைக்கு 10 சதவீத சலுகையும், ஆப்டிகல்ஸ்சுக்கு 25 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது.முதலில் பதிவு செய்யும், 500 பேருக்கு இலவச குடும்ப கண் பரிசோதனை தொகுப்பு வழங்கப்படுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 77369 05222 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago