உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைக்கழிவு லாரி கவிழ்ந்து விபத்து

குப்பைக்கழிவு லாரி கவிழ்ந்து விபத்து

போத்தனூர்:போத்தனூர், செட்டி பாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகத்தில், குப்பைக்கழிவு கொட்டப்படுகிறது. இதில் தரம் பிரிக்கப்பட்ட குப்பைக்கழிவு லாரி மூலம், தினமும் அரியலூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதுபோல் நேற்று மாலை குப்பைகழிவு ஏற்றிய லாரி ஒன்று, அருகேயுள்ள எடை போடும் மையத்திற்கு சென்றது. மீண்டும் குப்பை கழிவு வளாகத்திற்கு செல்ல திரும்ப வந்தபோது, எதிர்பாராவிதமாக குப்பை கழிவுடன், இருந்த லாரியின் பின்பகுதி கவிழ்ந்து கழிவு கீழே கொட்டியது. லாரியின் கேபின் கவிழாததால், டிரைவர் காயமின்றி தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை