இயந்திரத்தில் சிக்கி சிறுமி கை துண்டிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தனியார் நார் தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில், வடமாநில தொழிலாளியின் கை சிக்கி துண்டானது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, பொன்னேகவுண்டனுாரில் தனியார் நார் தொழிற்சாலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரும், அவரது,17 வயது மகளும் பணியாற்றி வருகின்றனர்.தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிறுமியின் இடது கை இயந்திரத்தில் சிக்கியது. அதில், அவரது மணிக்கட்டோடு துண்டானதாக கூறப்படுகிறது. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.