மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
3 hour(s) ago
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
8 hour(s) ago
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சிகள்
8 hour(s) ago
கோவை:கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக, அரசு டாக்டர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.கொல்கத்தாவில் நடந்த பெண் டாக்டர் கொலை தொடர்பாக, இன்று காலை, 6:00 மணியிலிருந்து, 24 மணி நேரம் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை, இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்ய, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், காணொலி வாயிலாக கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம், பயிற்சி டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் இணைந்து கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்தும், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவ மாணவிகளுக்கான பாதுகாப்பை, உறுதி செய்யவும், அனைத்து டாக்டர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்க வலியுறுத்தியும், இன்று கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காலை, 7:30 முதல், 8:30 மணி வரை, புறநோயாளி பிரிவுகள் புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன் தர்ணா நடத்த, முடிவு செய்யப்பட்டது.
3 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago