உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அன்னுார் : பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அன்னூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் அரசு பணிகளை செய்வதை நிறுத்த வேண்டும். பல ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த உறுதி மொழியை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு ஊழிய சங்கத்தின் அன்னூர் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிவக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி