உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்

வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்

பெ.நா.பாளையம்;இடிகரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தை மேற்கொண்டனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள், இளங்கலை படிப்பின் ஒரு பகுதியாக 'ஸ்டூடன்ட் ரெடி' திட்டத்தில் ஊரக வேளாண் விரிவாக்க கிராமத்தில் தங்கும் திட்டத்தின்படி, 'கிராம தங்குதல்' மேற்கொண்டு விவசாயம் படித்து வருகின்றனர். இவர்களில், 10 பேர் கொண்ட குழு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரையில் தங்கினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவர்கள் இடிகரை உயர்நிலைப் பள்ளிக்கு வந்து, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்த ஆண்டின் கருப்பொருளான பூமி மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான விவாதங்களை மாணவர்களுடன் மேற்கொண்டனர். பிளாஸ்டிக் மாசுபாடு, அது இயற்கைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பூமியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துக்காக பிளாஸ்டிக் முடிவுக்கு கொண்டு வருவது என்ற கருப்பொருளின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் குறித்து விளக்கினர். மேலும், மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ