கோவை;ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், இன்று குருபெயர்ச்சி மஹா யக்ஞம் நடக்கிறது.கிருஷ்ண அஷ்டமி திதி, திருவோண நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் மாலை 5:20 மணிக்கு குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். அப்போது கோதண்டராமர் தேவஸ்தானத்தில் உள்ள நவக்கிரஹ சன்னதியில் நவக்கிரஹ சாந்தியும், பரிகார யக்ஞமும் அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. அப்போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களும், புதன்கிழமைகளில் பிறந்தவர்களும், பரிஹாரம் செய்து கொள்ளலாம். அதே போல் கார்த்திகை, ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இன்று பகல் 2:00 மணிக்கு கணபதிஹோமம், நவக்கிரஹ சாந்தி, 4:00 மணிக்கு நவக்கிரஹ சன்னதியில் அபிஷேக ஆராதனை, 5:20 மணிக்கு மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடக்கிறது. நாளை காலை 7:00 முதல் 11:00 மணி வரை, குருபகவானுக்கு சங்கல்பத்துடன் அர்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்க, ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.