உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீட்ரூட் சாகுபடிக்கு உதவணும்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு

பீட்ரூட் சாகுபடிக்கு உதவணும்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு

உடுமலை : பீட்ரூட் சாகுபடி பரப்பு அதிகரிக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக சிறப்பு மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, கரிசல் விளைநிலங்களில் மட்டும் பீட்ரூட், பரவலாக இரு சீசன்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், முகூர்த்த சீசனில், நல்ல விலை கிடைப்பதால், திட்டமிட்டு அந்த சீசனில், விதைப்பை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் சாகுபடியில்,பூச்சி தாக்குதல், தரமான விதைகள் கிடைக்காதது உட்பட காரணங்களால், விளைச்சல் குறைந்து, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடிக்கு, தேவையான விதைகளுக்கு தனியார் நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது; ஏக்கருக்கு, விதைக்கு மட்டுமே, 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது.உரம் மற்றும் மருந்து தெளிக்கவும், கூடுதல் செலவாகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், மானிய விலையில் விதைகளை விற்பனை செய்தால், சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும்.மலைப்பகுதிகளுக்கு இணையாக சமவெளியிலும், போதுமான அளவு பீட்ரூட் விளையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ