உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இதோ வந்தாச்சு இன்னொரு மழைக்காலம்... முதியோர் உடல் நலம் எப்படி பாதுகாக்கணும்?

இதோ வந்தாச்சு இன்னொரு மழைக்காலம்... முதியோர் உடல் நலம் எப்படி பாதுகாக்கணும்?

வெயிலின் வெம்மையில் இருந்து விடுபட்டு, மழையின் குளுமைக்குள் பருவநிலை மாறி விட்டது. இந்த ஜில் சூழலில், முதியோருக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்து, ஓமியோபதி முதுநிலை மருத்துவர் தாமரைசெல்வன் கூறியதாவது:n மழைக்காலம் துவங்கிவிட்டதால், சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றிற்கு மாத்திரைகள் எடுத்து கொள்வோர், உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடல் செயல்பாட்டில் ஏதேனும் அசவுகர்யமாக இருப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும், தொடர் மாத்திரை எடுப்போர், அதை நிறுத்தக்கூடாது.n கொதிக்க வைத்து, ஆறிய பிறகு தண்ணீர் குடிப்பதே நல்லது. சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பானங்களை குடிக்கலாம். காய்கறி, கீரைகள் கொண்டு சூப் தயாரித்து சாப்பிடுவது, உடலுக்கு நல்லது. சர்க்கரை பாதிப்பு இல்லாதவர்கள், ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் சாப்பிட்டால், புத்துணர்வு ஏற்படும். சற்று வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, ஜூஸ் தயாரிக்க வேண்டும்.n பருவநிலை மாற்றத்தால் சிலருக்கு, மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சிறுநீர் தொந்தரவால் பாதிக்கப்படுவோர், அதிகாலை வெறும் வயிற்றில், நெருஞ்சிமுள் பொடியை, சுடுதண்ணீரில் சேர்த்து, ஆற வைத்தபின் குடிக்க வேண்டும்.n மலச்சிக்கலுக்கு, இரவில் சிறிது கடுக்காய் பொடி சாப்பிடலாம். சிறுநீர் வராமல் அவதிப்பட்டால், பார்லி அரிசி கஞ்சியை, உப்பு சேர்க்காமல் சாப்பிடலாம். மழைக்காலத்தில், கொள்ளு ரசம் சாப்பிடுவது நல்லது.n இரவு உணவுக்கு பின், ஒரு மணி நேரம் கழித்து துாங்க செல்ல வேண்டும். காலை வேளை தவிர, மற்ற நேரங்களில் அரை வயிறு சாப்பிடுவதே நல்லது.n வீட்டிற்குள் வழுக்கும் நிலையிலான டைல்ஸ் இருந்தால், பாதம் குளிர்ந்து சிலருக்கு, சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படலாம். வீட்டிற்குள் பிரத்யேக காலணி, சாக்ஸ் அணியலாம்.n மழைக்காலத்தில் அவசர தேவைகளுக்கு மட்டும், வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும். வாக்கிங் செல்வோர், வீட்டிற்குள்ளே நடக்கலாம். அப்போது தான், கால் உள்ளிட்ட மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.n வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய சூழலில், பிடித்த பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, ஓவியம் வரைவது போன்ற, பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உலக சினிமாக்களை பார்க்கலாம். மனநலனை எப்போதும், கிரீன் சிக்னலில் வைத்து கொள்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை