உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களின் உடல் நல பிரச்னைகளுக்கு இதோ தீர்வு!

பெண்களின் உடல் நல பிரச்னைகளுக்கு இதோ தீர்வு!

கோவை;கோவில்பாளையம், கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது.இந்த முகாமில் ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு பரிசோதனை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய ரூ.950 மதிப்புள்ள பரிசோதனைகள், ரூ.399க்கு வழங்கப்படுகிறது.மருத்துவர் ஆலோசனை மற்றும் பதிவுக் கட்டணம் இலவசம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை, 50 சதவீத சலுகை கட்டணத்தில் செய்துகொள்ளலாம்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை, கர்ப்பப்பை கட்டிகள், அடிக்கடி வயிறு மற்றும் இடுப்புவலி, பி.சி. ஓ.டி.,-பி.சி.ஓ.எஸ்., உடல் பருமன், தைராய்டு பிரச்னைகள், கருவுறுதல் பிரச்னைகள், சர்க்கரை நோய் மற்றும் பெண்கள் உடல்நலம் தொடர்பான, அனைத்து பிரச்னைகளுக்கும், ஆலோசனைகள் வழங்கப்படும்.பேறுகால சிகிச்சை தவிர்த்து, முகாமில் பரிந்துரைக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் சலுகை உண்டு. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, வரும் 31ம் தேதி வரை, காலை 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை முகாம் நடைபெறும். விபரங்களுக்கு, 87541 87551, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை