உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்

கோவை:குரும்பபாளையத்தில் உள்ள கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான, கல்வி ஆலோசனை வழங்கும் விழா, சத்தி ரோட்டில் அமைந்துள்ள முல்லை ஹாலில் நடந்தது. பள்ளியின் தாளாளர் வேலுச்சாமி நிகழ்விற்கு தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி ஆலோசகர்ஜெயப்பிரகாஷ் காந்தி, பத்தாம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம், எத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பளிக்கும் படிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.பள்ளியின் செயலர் வனிதா, பள்ளி முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள்கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை