உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடந்து வந்த பாதையை சொல்லும் வரலாறு முக்கியம் அமைச்சரே...! 

கடந்து வந்த பாதையை சொல்லும் வரலாறு முக்கியம் அமைச்சரே...! 

பழங்கால நாணயங்கள் மற்றும் புத்தங்கள் கண்காட்சி, கோவை ஸ்ரீ குஜராத்தி சமாஜத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நிறைவு பெறுகிறது.கோவை நாணயவியல் கழகம் சார்பில் நடந்து வரும் நிகழ்ச்சியில், கடந்த 1840ல் இருந்து 1947 வரை இந்தியர்கள் பயன்படுத்திய, பிரிட்டிஷார் நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. 50 ரூபாய், 75 ரூபாய், 100 ரூபாய் நாணயங்கள், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.ரிசர்வ் வங்கி துவங்கி, 90வது ஆண்டு துவக்க விழாவின் போது வெளியிட்ட 90 ரூபாய் நாணயம் நிச்சயம், காண்பவர்களை வியக்க வைக்கும். சோழர் கால நாணயங்களில், மோதிரம் செய்யப்பட்டிருப்பது 'வாவ்' சொல்ல வைக்கிறது. முத்தாய்ப்பாக, 'தினமலர்' நாளிதழின் டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறித்து, 'சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி' என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புத்தகம், கண்காட்சிக்கு வருபவர்களை, புரட்டி பார்க்க வைக்கிறது.கண்காட்சியில், விற்பனையும் உண்டு. இன்று கடைசி நாள். பழங்காலத்தின் அருமை குறித்து தெரிய, மறவாமல் இக்கண்காட்சிக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !