உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடரணும்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடரணும்

கோவை;இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று, 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 'கொரோனா காலத்தில் துவங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிகிறோம். அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்' எனவும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வலியுறுத்தினர். * காரமடை நகராட்சிக்குட்பட்ட, 17வது வார்டு சாஸ்திரி நகர் அம்பேத்கர் நகர் பட்டிக்காரம்பாளையம் பகுதியில், 150 குடும்பத்தினர் வாடகை வீடுகளிலும், குடிசைகளிலும் வசிக்கின்றனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக வழங்கப்படும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று, காரமடை நகராட்சி தலைவர் உஷா, கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை