| ADDED : ஆக 20, 2024 01:36 AM
கோவை;பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு, ஹோமியோபதி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோல்கட்டா பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், நீதி கேட்டும், கோவை ஹோமியோபதி டாக்டர்கள் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கம், கோவை மாவட்ட ஹோமியோபதி டாக்டர்கள் சங்கம், இந்திய ஹோமியோபதி மருத்துவ லீக் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி, ஆர்.வி.எஸ்., ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள், டாக்டர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவம் சார்ந்தவர்கள் சந்திக்கும் அநீதியை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு உடை அணிந்து, கையில் கறுப்பு நிற ரிப்பன்களை கட்டிக் கொண்டு, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அகில இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் திரஜ் சாமுவேல், கோவை மாவட்ட சங்கத்தின் கவுரவ ஆலோசகர் டாக்டர் தாமரைசெல்வன் உள்ளிட்ட டாக்டர்கள், போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.