உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மா மரக்கன்றுகள் மானியத்தில் வினியோகம்  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைப்பு 

மா மரக்கன்றுகள் மானியத்தில் வினியோகம்  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைப்பு 

ஆனைமலை;ஆனைமலை பகுதியில் மானியத்தில் மா மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை:மாமரமானது, இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படும் பழ வகைகளில் பிரதானமானதாகும். மாம்பழத்தில் வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' நிறைந்துள்ளதால் மக்கள் விரும்பி உட்கொள்கின்றனர்.இந்தியவில், 12 லட்சம் ெஹக்டேரில் உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் பயிரிடப்பட்டுள்ளது. மொத்த பழங்களின் ஏற்றுமதியில் மாம்பழம், 40 சதவீதம் இடத்தை பெற்றுள்ளது.மாமரமானது மண்ணின் கார அமிலத்தன்மை, 5.5 - 7.5 வரை உள்ள நிலங்களில் நன்றாக வளரும் இயல்புடையது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, தேனி, தர்மபுரி, வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பயிரிடப்படும் மா ரகங்களில் ஏற்றுமதிக்கு ஏற்றதாக, அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்துாரம், பழக்கூழ் உற்பத்திக்கு ஏற்ற ரகங்களான பங்களூரா, அல்போசா, இதர ரகங்களான நீலம், கலாப்பாடு, பிகேஎம் -1, பிஎம்கே - 2, மல்கோவா போன்றவைகளும் மக்களால் விரும்பப்படுகிறது.தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வாயிலாக, ஆனைமலை வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் மா விவசாயத்தை ஊக்குவிக்க, மா ஒட்டு கன்றுகள் வழங்கப்பட உள்ளன. ஆனைமலை வட்டாரத்தில் மா விவசாயமானது, 1,072 ெஹக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.நடப்பாண்டில், ஒட்டு மா ரகங்களான நீலம், செந்துாரம், பங்களூரா போன்றவை விவசாயிகளுக்கு ெஹக்டேருக்கு, 140 என்ற எண்ணிக்கையில் 38 ெஹக்டேருக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மா பயிரிட விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்தோ அல்லது ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.முன்பதிவுக்கு, சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நிலவரைபடம், ஆதார் கார்டு நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை