உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்

அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்

கோவை;பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மூன்று பாடங்களில் சென்டம் பெற்று, 500க்கு 498 மதிப்பெண் பெற்று, சிறப்பிடம் பிடித்துள்ளார் மாணவி தீபிகா.கோவை, காரச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி - அம்பிகா தம்பதியின் மகள் தீபிகா. ஒத்தக்கால்மண்டபம் பி.எம்.ஜி.,மெட்ரிக் பள்ளி மாணவியான இவர், 500க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.மாணவி தீபிகா கூறுகையில், எனது அப்பா லாரி ஓட்டுநர்; அம்மா விவசாயி. பள்ளியில் தரும் வீட்டுப் பாடங்களை தொடர்ந்து சரியாக செய்து வந்தேன். அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து விடுவேன். தேர்வு சமயங்களில் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிப்பேன். அதுவே நான் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த பக்கபலமாக இருந்தனர். பிளஸ் 1ல் கணிதத்துடன் கூடிய கணினி அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுக்க உள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ