உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் மழைநீர் வடிந்தால் தகவல் தெரிவிக்கணும்!

பஸ்சில் மழைநீர் வடிந்தால் தகவல் தெரிவிக்கணும்!

பொள்ளாச்சி:அரசு பஸ்சின் கூரை பகுதியில் அதிகமான மழைநீர் வடிந்தால், உடனே அந்தந்த கிளைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை கிளைகளில், 282 டவுன் பஸ்கள் மற்றும் தொலைதுார பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சில பஸ்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.இந்நிலையில், சமீபத்தில், வால்பாறையில் இயக்கப்பட்ட அரசு பஸ்சின் மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகியதால், பயணியர் குடைபிடித்துக் கொண்டு பயணித்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.இதையடுத்து, பொள்ளாச்சி பணிமனையைச் சேர்ந்த கட்டுமான பிரிவு உதவி பொறியாளர் சுப்ரமணியம், உதவி மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மழையின்போது ஓட்டுநர்கள், மிக கவனமுடன் அரசு பஸ்களை இயக்கவும், கூரை பகுதியில் அதிகமான மழைநீர் வடிந்தால், உடனே அந்தந்த கிளைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை