உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 6 மாதங்களில் 67 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 193 வழக்குகளில் 93 வாகனங்கள் சிக்கின

6 மாதங்களில் 67 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 193 வழக்குகளில் 93 வாகனங்கள் சிக்கின

பொள்ளாச்சி;பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், கடந்த, ஆறு மாதங்களில், 67 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், கடந்த ஜன., முதல், ஜூன் மாதம் வரை, 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 67 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அரசு மானியத்தில் வழங்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பாக, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 சிலிண்டர்கள், மற்றொரு வழக்கில், 15,200 லிட்டர் ரீ-சைக்கல்டு ஆயில், 6,400 லிட்டர் லுப் ஆயில், 10 கிலோ துவரம் பருப்பு, 10 லிட்டர் ரேஷன் பாமாயில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியாவை அதிக லாபத்துக்கு விற்பனை செய்ய வைத்து இருந்த குற்றத்துக்காக, ஒரு வழக்கு பதியப்பட்டு, 30 டன் யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடத்தலுக்கு பயன்படுத்திய, 66 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் -4, நான்கு சக்கர வாகனங்கள் - 23, என மொத்தம், 93 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மொத்தம், 200 பேர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ஒரு நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.போலீசார் கூறுகையில், 'தமிழக - கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை