உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம்

n கோவை அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட பொருளாளர் பார்த்திபன், பகுதி கழக செயலாளர்கள் செந்தாமரை பாலு, நடராஜ், ராஜு, பேரவை செயலாளர் கவுன்சிலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.n கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் சார்பில், வடவள்ளி சிறுவாணி ரோடு ஸ்ரீலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், விழா கொண்டாடப்பட்டது. வடவள்ளி காவல் ஆய்வாளர் பிராங்க்ளின், தேசியக் கொடி ஏற்றினார். தலைமை நிறுவனர் மற்றும் தலைவர் திருமலை ரவி முன்னிலை வகித்தார். சுந்தர்ராஜன், சிவக்குமார், சுகுமார், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகுமார் நன்றி கூறினார். சங்கம் சார்பில், வடவள்ளி இடையர் பாளையம், கணபதி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.* கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில், சிங்காநல்லுாரில், சங்க தலைவர் ராஜாமணி, தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர்கள் தேவராஜன், மோகன்ராஜ், பழனிசாமி, துணை தலைவர்கள் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். எச்.எம்.எஸ்., கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில், உடையாம்பாளையம், இருகூர், மாதப்பூர், ராசிபாளையம் உட்பட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது.n கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில், தேசிய பேரிடம் மேலாண்மை அமைப்பின் டெல்டா ஸ்குவாட் கமாண்டர் மெப்டினென்ட் ஈசன், எதிர்கால இந்தியா குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.n க.க.சாவடி, ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரியில், கோவை ஸ்ரீ நாராயண குழு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சஜூஷ்குமார் தேசியக் கொடியேற்றினார். கல்லுாரி முதல்வர் கல்பனா பேசினார். மாணவர் பேரவை தலைவர் ஆண்டோ நிர்மல் நன்றி கூறினார். நிகழ்ச்சியை, உடற்கல்வி ஆசிரியர் லெப்டினென்ட் ஜெயப்பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.n கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பில், பல்கலை வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம், தேசியக் கொடியேற்றினார். மாணவ சங்கத் தலைவி சஹானா வரவேற்றார். துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், கோவை மனநல ஆய்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ராஜ் ஆகியோர் பேசினர். 'நமது சுதந்திரத்தின் பாரம்பரியம் கைத்தறித் துணி' என்ற தலைப்பில், செல்பி எடுக்கப்பட்டது. மாணவ சங்க செயலர் கீர்த்தனா நன்றி கூறினார்.n நிர்மலா கல்லுாரியில், கோவை இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பிரப்கிரண் கில்லன், தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கம், துாய்மைப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் மேரி பபியோலா, துணை முதல்வர் எமல்டா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.n பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், கல்லுாரி இயக்குனர் அல்லி ராணி, தேசியக்கொடி ஏற்றினார். புதுமையான தயாரிப்புகள் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.n பாரதியார் பல்கலைக் கழகத்தில், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர், தேசியக்கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ்., சார்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்கலை பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் அறிவுறுத்தலின் படி, உடற்கல்வி துறை பேராசிரியர் அன்பழகன் மற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.n கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கோவை விமானப்படை நிர்வாக கல்லுாரி குரூப் கேப்டன் முரளிதரன், தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி தலைவர் மகாவீர் போத்ரா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுப்ரமணி, செயலாளர் சுனில்குமார் நஹாடா, துணை செயலாள் பரத்குமார் ஜெகமணி, எஸ்.என்.வி., பள்ளி செயலாளர் நிஷாந்த் ஜெயின், துணை செயலாளர் ரத்தன்சந்த் போத்ரா உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்துறை தலைவர் வெங்கடலட்சுமி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.n செட்டிபாளையம், ஓராட்டுக்குப்பை குபேரன் நகரில் நடந்த விழாவில் செட்டிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் 15வது வார்டு கவுன்சிலர் கனகராஜ் தலைமையேற்று கொடி ஏற்றி வைத்தார். நெடுஞ்சாலை துறை ஓய்வு ராமசாமி, பிஎஸ்என்எல் ஓய்வு பஷீர் மற்றும் குபேரன் நகர் மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை