உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும்... ஆனா வராது... ! போனில் குறுஞ்செய்தி வரும்: காத்திருந்தாலும் பணம் வராது: போலி ஆப் வாயிலாக மோசடி

வரும்... ஆனா வராது... ! போனில் குறுஞ்செய்தி வரும்: காத்திருந்தாலும் பணம் வராது: போலி ஆப் வாயிலாக மோசடி

கோவை: பெரிய தொகை மோசடி நடந்தால் மட்டுமே, நாம் போலீசாரிடம் புகார் அளிக்கிறோம். ரூ. 500 - 1000 வரையிலான பண மோசடிகளுக்கும், புகார் தெரிவிக்க போலீசை அணுக வேண்டும் என்பதற்கு, சமீபத்தில் நடந்து வரும்,இந்த புதுவித மோசடி உதாரணம்.வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள் சிறிய மளிகை கடைகள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், சாலையில் சென்று கொண்டிருக்கும் நபர்கள் என, பலரை குறிவைத்து இந்த மோசடியை அரங்கேற்றுகின்றனர்.பணம் அனுப்பியது போல், 'ஸ்கிரீன் ஷாட்' மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப ஆப்கள் வந்துவிட்டன. 'போலி யு.பி.ஐ., ஸ்கிரீன் ஷாட் ஆப்', 'போலி பேமென்ட் ஆப்' என பல ஆப்கள், இணையத்தில் வந்துவிட்டன. இதை பயன்படுத்தி பலர் தற்போது இந்த மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.இதன்படி, கடைகளில் பொருள் வாங்க வரும் மோசடி பேர்வழிகள், 'ஜிபே' வாயிலாக பணம் செலுத்தி விட்டதாக, ஸ்கிரீன் ஷாட் காண்பிப்பர். ஆனால், பணம் அக்கவுன்டில் கிரெடிட் ஆகி இருக்காது.இது குறித்து, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், ''தற்போது போலி பேமென்ட் செயலிகள் பயன்படுத்தி நடக்கும், மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணம் அனுப்பியது போல் ஸ்கிரீன் ஷாட், மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி உள்ளிட்டவை அனுப்புகின்றனர்.மொபைலில் குறுஞ்செய்தி வந்து விட்டது என நம்பக் கூடாது. ஒவ்வொரு முறையும், வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என, சோதனை செய்ய வேண்டும்.பணம் வந்த பிறகே, உறுதி செய்ய வேண்டும். கூட்டம் அதிகம் இருக்கும் கடைகளில், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.சிறு தொகை என்பதால் பலர் புகார் அளிக்க முன்வருவதில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை