உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி போட்டி ; கலக்கிய வீரர்கள் 

கபடி போட்டி ; கலக்கிய வீரர்கள் 

கோவை;கோவை மாநகர போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கபடி போட்டியில், வீரர்கள் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோவை மாநகர போலீஸ் சார்பில் சர்வதே போதைப்பொருள் துன்புறுத்தல் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கபடி மைதானத்தில், நடக்கும் இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் 64 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றன. இதன் ஆண்கள் பிரிவு நாக் அவுட் சுற்றில் தீனா நினைவு கபடி அணி 22 - 9 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்குபாளையம் அணியையும், ஏ.எஸ்.சி., ஸ்போர்ட்ஸ் அணி 29 - 26 என்ற புள்ளிக்கணக்கில் சூலுார் கபடி அணியையும், 4ம் பட்டாலியன் அணி 27 - 16 என்ற புள்ளிக்கணக்கில் டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணியையும், சிவகாமி ஸ்போர்ட்ஸ் அணி 21 - 12 என்ற புள்ளிக்கணக்கில், வி.எம்.கே.சி., அணியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்