உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமாட்சியம்மன் திருவிழா; 108 சங்கு வழிபாடு

காமாட்சியம்மன் திருவிழா; 108 சங்கு வழிபாடு

வால்பாறை; வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலின், 57ம் ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, ஏகாம்பரஈஸ்வரரை கைலாய சிவவாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை அழைத்து, திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது.விழாவில், நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. காலை, 11:00 மணிக்கு கோவை சிவகாம பிரவீனா ஸ்ரீவிஷ்ணு சிவம் குழுவினர் சார்பில், 108 சங்குபூஜை நடைபெற்றது.பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை