உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா

கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா

கோவை;அரசூர் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில் நடந்த ஆண்டு விழா மற்றும் வேலைவாய்ப்பு தினவிழாவில், 398 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.கல்லுாரி செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவன துணை தலைவர் மதுரவீந்தரன் பேசுகையில், ''இளம் தலை முறையினர் நேர் மறையான எண்ணங்களோடு செயல்பட்டு, பன்மொழிப் புலமையில் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார்.சென்னை ஹெல்த்கேர் கணினி நிறுவன டெலிவரிலீட் பரணிவித்யசாரதி பேசுகையில்,''விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படை முதலிய துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெறுதல் அவசியம்,''என்றார். தமிழ்துறை பேராசிரியர் அரவிந்த்குமார், பி.பி.ஏ.சி.ஏ., துறையை சேர்ந்த கிருத்திகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான, 398 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ