உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோபோடிக்ஸ் தேசிய போட்டி; வென்ற கே.ஐ.டி., மாணவர்கள்

ரோபோடிக்ஸ் தேசிய போட்டி; வென்ற கே.ஐ.டி., மாணவர்கள்

கோவை:ஐ.இ.இ.இ., கூட்டமைப்பின் சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியின் ஒருபகுதியாக, ஐ.இ.இ.இ., கூட்டமைப்பின் சென்னை பிரிவுதேசியளவில், ரோபோடிக்ஸ் போட்டியை நடத்தியது.இதன் இறுதிப் போட்டியில், தேசிய அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை, கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி (கே.ஐ.டி.,) மாணவர் குழு வென்றுள்ளது.கலைஞர் கருணாநிதி கல்லுாரி மாணவர்களின், அண்டர்வாட்டர் ரோபோட் தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்தது. நீருக்கடியில் ஆய்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த கண்டுபிடிப்பு, கலைஞர் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.முதல் பரிசு பெற்ற மாணவர்கள், தயாளன், கிளாட்சன் பால், அபினேஷ், ஆரோக்கிய சுபிக் ஷா ஆகியோர் ஜப்பானில் உள்ள மெய்ஜி பல்கலையில், வரும் ஆக.,29ம் தேதி நடைபெறும் சர்வதேச போட்டியின், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.டோக்கியோவில் உள்ள நகானோ வளாகம் மற்றும் தேசிய ஒலிம்பிக் நினைவு இளைஞர் மையத்திலும், கே.ஐ.டி., மாணவர் குழு தங்கள் திறமை மற்றும் செயல்திறனை உலகளாவிய நிலையில் வெளிப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை