உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை தலைமை வகித்தார்.வக்கீல் சங்க செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பிரபு, துணை செயலாளர் அருள்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, மத்திய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து பேசினர். மேலும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது; வெளிநாடு வக்கீல்களை, இந்தியாவில் அனுமதிக்க கூடாது, வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்தவுடன், சஸ்பெண்ட் பண்ணக்கூடாது; முழுமையாக விசாரித்து குற்றம் நிரூபித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை