உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாயில் கசிவு; சீரமைப்பு பணி தீவிரம்

குடிநீர் குழாயில் கசிவு; சீரமைப்பு பணி தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில் வசிக்கும் மக்களின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 1.4 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, குடிநீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.அதில், மார்க்கெட் ரோட்டில் இருந்து, மகாலிங்கபுரம் மற்றும் சுதர்சன் நகர் குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு வரக்கூடிய பிரதான குழாய், மகாலிங்கபுரம் சுப்பம்மாள் லே--அவுட் அருகே கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணானது.இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், கசிவு ஏற்பட்ட இடத்தில் உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பிரதான குழாயில், மகாலிங்கபுரம் டி.எஸ்.பி., அலுவலகம் ரோட்டில் ஏற்பட்ட கசிவு உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ