உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?

தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?

அன்னுார் : செந்தாம் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் சிறுத்தை புகுந்ததாக கூறப்பட்டது புரளி என வனத்துறையினர் தெரிவித்தனர். பொன்னேகவுண்டன் புதூர் அருகே செந்தாம் பாளையத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த தனியார் நிறுவனத்தில் இரவு நேரத்தில் ஒரு மர்ம விலங்கு சென்றது சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரிந்தது. அந்த மர்ம விலங்கை சிறுத்தை என்று கூறிய ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை சென்னப் செட்டிபுதூரிலும் தென்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளையும், கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் பெரிதாக இருக்கும். நகம் படியாது. எனவே இது சிறுத்தை அல்ல என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை