யோகாவில் வென்ற மகரிஷி மாணவர்கள்
பொள்ளாச்சி; தமிழ்நாடு யோகா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி பழநியில் நடந்தது. இதில், பொள்ளாச்சி மகரிஷி சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில், முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.