உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலேரியா விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

மலேரியா விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வி.எஸ்.பி., கல்லுாரியில் சுகாதார துறை சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, சுகாதார துறை சார்பில், கிணத்துக்கடவு வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியில் மலேரியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் சமித்தா தலைமை வகித்தார். இதில், மருத்துவர்கள் வசந்த் திவாகர் மற்றும் அக்னீஸ் கோல்டா, சுகாதார துறை அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.வீடு மற்றும் தெரு பகுதிகளில் உள்ள பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் தண்ணீர் தேங்கும் இடம் போன்றவற்றை அகற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பேரணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை