உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன தணிக்கை ஒழுங்கா நடக்குதா ;தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு

வாகன தணிக்கை ஒழுங்கா நடக்குதா ;தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு

கோவை;கோவை மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், வாகன தணிக்கை ஒழுங்காக நடக்கிறதா என, ஆன்-லைன் முறையில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தின் இரு எல்லைப்பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளாகவும் அமைகிறது.நடுப்புனி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனுார், வாளையார், செம்மனாம்பதி உட்பட்ட, 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வழித்தடங்களில் வரும் வாகனங்களை தணிக்கை செய்ய, அங்குள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ஐந்து 'டிவி' ஸ்கிரீன் அமைக்கப்பட்டு, வாகன சோதனை முறைாக நடக்கிறதா என, ஆன்-லைன் முறையில் கண்காணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை