உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்காணிப்பு தீவிரம்; ரூ.6.93 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு தீவிரம்; ரூ.6.93 லட்சம் பறிமுதல்

- நிருபர் குழு -பொள்ளாச்சி பகுதியில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 5 லட்சத்து, 38 ஆயிரத்து, 900 ரூபாய்; ஒரு லட்சத்து 54 ஆயிரத்து, 550 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அருகே, கோபாலபுரம் சோதனைச்சாவடியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சியை சேர்ந்த பெரியசாமி, முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 70 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கேரளா மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்த போது, சம்சுதீன் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 75 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோபாலபுரம் சோதனைச்சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில், வாகனத்தில் வந்த கேரளாவை சேர்ந்த ராஜன், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 900 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதே பகுதியில், கேரளாவில் இருந்து வாகனத்தில் வந்த முதலமடையை சேர்ந்த ரகமதுல்லா, முறையான ஆவணங்களின்றி வைத்திருந்த, 67 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஜமீன் ஊத்துக்குளியில் பறக்கும்படை குழுவினர், வாகன சோதனை செய்தனர். அதில், ரமணமுதலிபுதுாரை சேர்ந்த அருண்குமார், ஆவணங்களின்றி கொண்டு வந்த, இரண்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி பகுதியில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 5 லட்சத்து, 38 ஆயிரத்து, 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை, சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

உடுமலை

உடுமலை - செஞ்சேரி மலை ரோட்டில், குறிஞ்சேரி பைபாஸ் அருகில், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்த ஹரிஹரசுதன், ஆவணங்கள் இல்லாமல், தேர்தல் விதிமீறி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 150 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.அதே போல், உடுமலை - திருப்பூர் ரோட்டில், பெரியபட்டி பஸ் ஸ்டாப் அருகே, நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சுந்தரம், போலீசார் சந்தானமாரி, கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர், சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சரக்கு வேனில் பொள்ளாச்சி ஏரிப்பட்டியைச் சேர்ந்த சபாபதி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 54,400 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை