உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை

கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை

மேட்டுப்பாளையம்;காரமடை பெள்ளாதியில் இரண்டரை வயது மகளுடன், தாய் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். காரமடை பெள்ளாதி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 32, இவரது மனைவி கலாமணி, 28. இவர்களது இரண்டரை வயது மகள் அஸ்விகா.கடந்த ஒரு வாரத்திற்கு முன் சந்தோஷ்குமாரை, கலாமணி வேலைக்கு போகச் சொல்லியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே, நேற்று முன் தினம் காலை கலாமணி, அஸ்விகாவுடன் மாயமானார். சந்தோஷ்குமார் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது, அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சிறுமியின் செருப்பு இருந்தது. இதனையடுத்து சிறுமியும்,தாயும் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள், மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி, கலாமணி, அஸ்விகாவை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை