உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆள் இறங்கும் குழியால் அபாயம்; திக்குமுக்காடும் வாகன ஓட்டுநர்கள்

ஆள் இறங்கும் குழியால் அபாயம்; திக்குமுக்காடும் வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இணைப்புச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, கோட்டூர் ரோடு - தெப்பக்குளம் வீதி இணைப்புச்சாலை உள்ளது. இந்த ரோடு வழியாக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், கோட்டூர் ரோடு அருகே உள்ள இணைப்புச் சாலையில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி அவ்வப்போது சேதமடைவதும், சீரமைப்பதும் வாடிக்கையாகி உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகராட்சி பள்ளி அருகே இணைப்புச்சாலையில் உள்ள ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளது. குழியிருந்த பகுதி உள் இறங்கி விபத்துக்கு அச்சாரம் போடுகிறது.வாகனங்கள், குழியில் இறங்கிச் செல்வதால் பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் சூழலும் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது குழிகள் சேதமடைவதும், மீண்டும் சீரமைப்பதும்; பின்னர், சேதமாகுவதும் தொடர்கதையாகியுள்ளது.கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும் நிலையில், இங்குள்ள குழியை தரத்துடன் முறையாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து நிறைந்த ரோட்டில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண நிர்வாகம் முன்வர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ