உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுகலான குமரலிங்கம் - கொழுமம் ரோடு; வாகன நெரிசலால் அவதி

குறுகலான குமரலிங்கம் - கொழுமம் ரோடு; வாகன நெரிசலால் அவதி

பஸ் நிறுத்தம் இல்லை

உடுமலை சாலரப்பட்டியில் பஸ் ஸ்டாப் இல்லாததால், பயணியர் வெயிலில் நின்று பஸ் ஏறுகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு பஸ் ஸ்டாப், நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதுராமன், உடுமலை

நகராட்சி கவனத்துக்கு

உடுமலை சர்தார் வீதியில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியை சுற்றியுள்ள பகுதி உள்வாங்கி இருக்கிறது. ரோடு சமதளத்திலிருந்து இறங்கி இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை கடந்துசெல்லும்போது தவறி விழுகின்றனர்.- வெள்ளிங்கிரி, உடுமலை.

குறுகலான ரோடு

குமரலிங்கம் - கொழுமம் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் பஸ்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் ரோட்டை கடக்க முடிவதில்லை. அவ்வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நிறுத்தப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ஸ்ரீதர், உடுமலை.

கால்வாயை துார்வாரணும்

உடுமலை ஸ்ரீ நகரில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இது துார்வாரப்படாததால், மண், குப்பை அடைத்துக்கொண்டுள்ளது. நகராட்சியினர் கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை

உடுமலை, காந்திசவுக் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. மாலை நேரங்களில் அப்பகுதியில் மிகவும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாவதும் அதிகரிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் சென்றுவருவதற்கும் பாதுகாப்பில்லாத சூழலாக உள்ளது.- ராமசந்திரன், உடுமலை.

ரோட்டில் கட்டடக்கழிவுகள்

உடுமலை, சரவணா வீதியில் கட்டடக்கழிவுகள் ரோட்டில் கொட்டப்பட்டுள்ளன. ரோட்டை ஆக்கிரமித்து கழிவுகள் நிறைந்து கொட்டப்பட்டிருப்பதால் மிகுதியான புழுதிமண் பறக்கிறது. இதனால் அப்பகுதியில் இருப்பவர்களுக்கும் சுவாச பிரச்னை ஏற்படுகிறது. வீதியில் கட்டடக்கழிவுகள் கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தர்மலிங்கம், உடுமலை.

நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணை சேடல் டேம் பகுதியில் பாழடைந்த நிலையில் பயணியர் நிழற்கூரை உள்ளது. இதனால், பஸ் பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் இதை சீரமைக்க வேண்டும்.-- -விமல், சேடல்டேம்.

கரப்பான் பூச்சி தொல்லை

கிணத்துக்கடவு, அரசு மருத்துவமனை, எக்ஸ்ரே பிரிவில் கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவு உள்ளது. இதனால், மருத்துவமனை வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் கொண்டு முறையாக மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும்.- -லோகநாதன், கிணத்துக்கடவு.

முழுமை பெறாத ரோடு

கிணத்துக்கடவு, அண்ணா நகர் சர்வீஸ் ரோட்டின் அருகே, சி.டி.சி.சி., பேங்க் அமைந்துள்ளது. இந்த பேங்க் அருகே உள்ள ரோடு முழுமை பெறாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், கார் போன்ற வாகனங்கள் சென்றால் விபத்து நேரிடவும் அதிக வாய்ப்புள்ளதால், இதை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.- -கோகுல், கிணத்துக்கடவு.

சிக்னல் இல்லை

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முதல் ஆச்சிபட்டி வரை உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில், ஆங்காங்கே சிக்னல் இல்லாததால் வாகனத்தில் செல்பவர்கள், சென்டர் மீடியனில் வாகனத்தில் திரும்பும் போது விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்க சிக்னல் இல்லாத இடத்தில், சிக்னல் அமைக்க வேண்டும்.- -கண்ணன், பொள்ளாச்சி.

குறுக்கு பட்டை தேவையா?

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் செல்லும் வாகனங்கள் செல்ல இடையூறாக குறுக்கு பட்டைகள் உள்ளது. இதனால், அதிக அளவு இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த குறுக்கு பட்டைகளை அகற்ற வேண்டும்.-- -டேனியல், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ