உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கொடிநாள் தினம் கல்லுாரியில் கொண்டாட்டம்

தேசிய கொடிநாள் தினம் கல்லுாரியில் கொண்டாட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரியில் நடந்த தேசிய கொடிநாள் தின விழாவில், கல்லுாரி முதல்வர் பிரபாகர், தேசிய கொடியை ஏற்றினார்.தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. கல்லுாரி இயக்குநர் கெம்புச்செட்டி, தேசிய கொடியின் சிறப்பு குறித்து விளக்கிப் பேசினார். மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நாட்டின் அடையாளமாக தேசிய கொடி திகழ்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா இந்திய தேசிய கொடியை வடிவமைத்த நிலையில், 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்திய அரசின் அப்போதைய ஆங்கிலேயே நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியது.அந்தக் கொடியே, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. எனவே, ஆண்டுதோறும், ஜூலை 22ல், தேசிய கொடிநாள் தினம் கொண்டாடப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை