உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி

இயற்கை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் இரண்டு நாட்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி இன்று துவங்குகிறது.மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு இயங்கும் வேளாண் காடுகள் வணிக காப்பகத்தில் இரண்டு நாட்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி இன்று துவங்குகிறது.இப்பயிற்சியில் இயற்கை பொருட்களை கொண்டு சோப்பு, கூந்தல்தைலம், சாம்பு, லோசன் மற்றும் லிப்பாம் தயாரிக்கும் முறைகள் மற்றும் சந்தை படுத்துதலுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் வழிகளை பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7695887220 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை