உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய சீருடையில்லை...முகத்தில் மலர்ச்சியில்லை! பள்ளி திறக்கும் முன் வழங்கினால் என்னவாம்?

புதிய சீருடையில்லை...முகத்தில் மலர்ச்சியில்லை! பள்ளி திறக்கும் முன் வழங்கினால் என்னவாம்?

கோவை:அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில், ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. இந்த சீருடைகளை, பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்குவதில்லை. பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு வழங்கப்படுகின்றன. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் கடந்த ஆண்டு பயன்படுத்திய சீருடைகளையே அணிந்து வருகின்றனர்.கோவையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதிய சீருடை அணிந்து, புதிய புத்தகப்பை மற்றும் காலணிகள் அணிந்து, மிடுக்கான தோற்றத்தில் பள்ளிக்கு செல்கின்றனர்.ஆனால் அரசு பள்ளி மாணவ மாணவியர், கடந்த ஆண்டு அரசால் வழங்கப்பட்ட பழைய சீருடையை அணிந்து, முகமலர்ச்சியின்றி பள்ளிக்கு செல்கின்றனர்.அதனால், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் நாளிலேயே புதிய சீருடைகள் வழங்க வேண்டும் என, பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சீருடைக்கான துணிகள், டெண்டர் கொடுக்கப்பட்ட பின் தாமதமாகத்தான் வருகிறது. அதன் பிறகு, அளவு எடுத்து சீருடைகள் தைக்கப்படுகின்றன. அதனால் பள்ளிகள் திறக்கும் நாளில் சீருடைகளை கொடுக்க முடிவதில்லை. இந்த மாத இறுதிக்குள், ஒரு ஜோடி சீருடை கொடுத்து விடுவோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ