உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணிக்கை

சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணிக்கை

கோவை : கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த உண்டியல் எண்ணிக்கையில் நான்கு லட்ச ரூபாய் பக்தர்கள் காணிக்கையாகவும், இரண்டு பித்தளை வேல்களையும் சமர்பித்திருந்தனர். கோவை பெரியகடை வீதி கோட்டை மேட்டில் சங்கமேஸ்வரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த நான்கு மாதங்களுக்கு பின் நேற்று உண்டியல் எண்ணிக்கை அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் பிரபாகரன் முன்னிலையில் நேற்று நடந்தது.உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் தன்னார்வலர்கள் என்று 20 பேர் பங்கேற்றனர். சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. 3,98,547 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். 500, 100, 200 ரூபாய் நோட்டுகளும் சில்லறை காசுகளும் அதிக அளவு உண்டியலில் இருந்தது.முருகப்பெருமான் சன்னிதியின் முன் இருந்த உண்டியலில் வீடு கட்டுவது, நிலப்பிரச்னை, கடன் தீர்வு, குடும்ப பிரச்னைக்கு தீர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோரிக்கை மனுக்கள் வந்திருந்தன. மொத்தமுள்ள 6 சன்னிதிகளில் 8 உண்டியல்கள் உள்ளன. இவையனைத்தும் திறந்து எண்ணப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை