உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயல்புக்கு திரும்பிய பட்டுக்கூடு வரத்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

இயல்புக்கு திரும்பிய பட்டுக்கூடு வரத்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

கோவை:வெயில் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், பட்டுக்கூடு வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், கோவை, சேலம், தேனி, உடுமலை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறையின் கீழ், பட்டு விற்பனை அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.விவசாயிகள் உற்பத்தி செய்து பட்டுக்கூடுகளை இங்கு, நேரடியாக விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி அமைந்துள்ளது. பட்டுக்கூடு விற்பனை அங்காடியில், தினந்தோறும் மதியம் பட்டுக்கூடு ஏலம் விடப்படுகிறது. விவசாயிகள், நுாற்பாளர்கள் ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். நேற்று நடைபெற்ற ஏலத்தில், ஒரு கிலோ அதிகபட்சமாக, 465 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 210 ரூபாய்க்கும், சராசரியாக 390 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன்படி, நேற்றைய ஏலத்தில், மொத்தம் 1,925 கிலோ 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. வெயில் குறைந்துள்ள சூழலில், பட்டுக்கூடு வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை