உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

- நமது நிருபர் -போக்சோ வழக்கில் முதியவருக்கு, 5 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகேயுள்ள ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்,64. கடந்த 2021, ஆக., 20ல், மீன் பிடிக்க சென்றார்.அப்போது காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, பாலியல் துன்புறுத்தல் செய்தார். புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, பெருமாளை கைது செய்து, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு, ஐந்தாண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி