உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

கோவை:போக்சோ வழக்கில், முதியவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் பக்திராஜ்,65; 2019, செப்., 11ல், வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்குள் விளையாடிய ஐந்து வயது சிறுமியிடம், பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் விசாரித்து, பக்திராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பக்திராஜிக்கு, ஐந்தாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ